அடடே சூப்பர்!! வாட்ஸ் ஆப்பில் 2GB வரை ஃபைல் பரிமாற்றம்!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (15:06 IST)
வாட்ஸ் ஆப்  நிறுவனம் 2GB கோப்பு (Files) பரிமாற்ற வரம்பை பரிசோதித்து வருகிறது என புதுத்தகவல் வெளியாகியுள்ளது. 

 
வாட்ஸ் ஆப்பில் தற்போது 100 எம்.பி வரைக்கும் மட்டுமே ஃபைல்களை அனுப்பும் வசதி இருந்துவருகிறது. பெரிய ஃபைல்களை அனுப்புவதானால் அவற்றை ஒரே நேரத்தில் அனுப்ப இயலாது. எனவே இதில் பயனர்களுக்கு மாற்றம் கொண்டுவதற்காக வாட்ஸ் ஆப்பில் 2 ஜிபி அளவு வரையிலான கோப்புகளை இனி அனுப்பலாம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
சோதனை முயற்சியாக முதலில் அர்ஜென்டினா நாட்டில் இதனை பரிசோதித்து பார்க்கவுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் ஆப்பின் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இது கொண்டுவரப்படும் எனவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்