பிரபலமான விவோ நிறுவனம் தனது புதிய Vivo X90 Pro ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் பிரபலமாக உள்ள விவோ நிறுவனம் தனது ப்ராண்ட் நியூ Vivo X90 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. ரேம், கேமரா குவாலிட்டி என அனைத்திலும் பல ப்ளஸ்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த Vivo X90 Pro ஸ்மார்ட்போன் மே 5ம் தேதி விற்பனைக்கு வர உள்ள நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பவிலை ரேம் + இண்டெர்னல் மெமரியை பொறுத்து ரூ.76,999ல் இருந்து தொடங்குகிறது.