பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

Mahendran

வியாழன், 19 டிசம்பர் 2024 (16:18 IST)
ராகுல் காந்தி தள்ளியதால் பாஜக எம்பிக்கள் இரண்டு பேர் காயம் அடைந்ததாகவும், அவர்களில் ஒருவருக்கு தையல் போடப்பட்டதாகவும், இருவரும் தற்போது மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம் ஏற்பட்டுள்ளது என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  புகார் கடிதம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து தரக்குறைவாக பேசியதாக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கிய நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக மீது எதிர்க்கட்சியினர் ஆவேசமடைந்தனர். அதேபோல், எதிர்க்கட்சிகள் மீது பாஜக எம்பிகளும் குற்றம் சாட்டினர்.
 
இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஆவேசமாக வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், ராகுல் காந்தி தள்ளியதால்  இரண்டு பாஜக எம்பிக்கள் கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்தநிலையில், பாஜக எம்பியால் நான் தள்ளப்பட்டேன். இதனால் நிலைகுலைந்து தரையில் உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது எனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர், காங்கிரஸ் எம்பிக்கள் என்னை நாற்காலியில் அமர வைத்தனர். மிகுந்த சிரமத்துடன் நான் வீட்டிற்கு திரும்பினேன். இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே மக்களவைத் தலைவர் ஓம் பிரகாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரது இந்த கடிதம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்