இந்தியாவில் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ரெட்மி நிறுவனமும் ஒன்று. பல சிறப்பம்சங்களுடன், நவீன தொழில்நுட்பங்களோடு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் ரெட்மி தற்போது குறைந்த விலையில் அளவான அம்சங்களுடன் கூடிய ரெட்மி 12சி என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
Redmi 12C ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
-
மீடியாடெக் ஹெலியோ G85 ப்ராசஸர்
-
மாலி G52 MC2 ஜிபியூ
-
4 ஜிபி / 6 ஜிபி ரேம்
-
64 ஜிபி / 128 ஜிபி இண்டெர்னல் மெமரி (மெமரி கார்ட் ஸ்லாட் உண்டு)
-
5 எம்பி வைட் ஆங்கிள் முன்பக்க கேமரா
-
50 எம்பி + 2 எம்பி பின்பக்க ப்ரைமரி கேமரா
-
ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார், எஃப் எம் ரேடியோ,
-
5000 mAh Battery, 10W Fast Charging
Redmi 12C ஸ்மார்ட்போன் 4ஜி வசதியுடன் வெளியாகிறது. இது ப்ளாக், ப்ளூ, மிண்ட் மற்றும் பர்ப்பிள் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.
4 ஜிபி/64 ஜிபி, 4 ஜிபி / 128 ஜிபி, 6 ஜிபி / 128 ஜிபி என்ற மூன்று வகையான மெமரி கொள்ளளவுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.