அதிவேகமான ரேம் மற்றும் அட்டகாசமான வசதிகளுடன் மிகவும் விலைகுறைவான 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ஐடெல் நிறுவனம்.
இந்தியாவில் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை பிடிக்க பல நிறுவனங்களும் போட்டி போட்டு வரும் நிலையில் ஐடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Itel P55 5G குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் கவனத்தை ஈர்த்துள்ளது.
Itel P55 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்;
6.6 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே
மீடியாடெக் டைமென்சிட்டி 6080 சிப்செட்
2.4 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
ஆண்ட்ராய்டு 13
4 ஜிபி / 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம்
64 ஜிபி / 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
1 டிபி வரை நீடிக்கக்கூடிய மெமரி கார்டு ஸ்லாட்
50 எம்பி + டெப்த் சென்சார் டூவல் ப்ரைமரி கேமரா
8 எம்பி முன்பக்க செல்பி கேமரா
5000 mAh பேட்டரி, 18 W பவர் சார்ஜிங்
இந்த Itel P55 5G ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.9,699 மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.9,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 ஆயிரத்திற்குள் நல்ல ரேம், மெமரி கெபாசிட்டியோடு 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களுக்கு குறைவான விலையில் வெளியாகியுள்ள இந்த Itel P55 5G சிறந்த சாய்ஸாக இருக்கும். ஆனால் மற்ற ஸ்மார்ட்போன்களோடு ஒப்பிட்டால் இதன் கேமரா குவாலிட்டி ஆவரேஜ் ரகம்தான்.