பிரபலமான கூகிள் நிறுவனம் தனது புதிய Google Pixel 8 Series ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா முழுவதும் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபலமான கூகிள் நிறுவனம் தனது புதிய Google Pixel 8 Seriesஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 7 வருடங்களுக்கு ஃப்ரீ அப்டேட் என்ற அசத்தலான ஆஃபருடன் வெளியாகியுள்ளது.
Google Pixel 8 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி+ டிஸ்ப்ளே
கூகிள் டென்சார் G3 சிப்செட்
ஆண்ட்ராய்டு 14 (7 ஆண்டுகளுக்கு ஃப்ரீ அப்டேட்)
50 எம்பி + 12 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா
10.5 எம்பி முன்பக்க செல்பி கேமரா
8 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
4575 mAh பேட்டரி, 27 W பாஸ்ட் சார்ஜிங், 18 W வயர்லெஸ் சார்ஜிங்
Google Pixel 8 Pro ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி+ டிஸ்ப்ளே
கூகிள் டென்சார் G3 சிப்செட்
ஆண்ட்ராய்டு 14 (7 ஆண்டுகளுக்கு ஃப்ரீ அப்டேட்)
50 எம்பி + 12 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா
10.5 எம்பி முன்பக்க செல்பி கேமரா
12 ஜிபி ரேம், 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
5050 mAh பேட்டரி, 30 W பாஸ்ட் சார்ஜிங், 23 W வயர்லெஸ் சார்ஜிங்
இந்த Google Pixel 8 மற்றும் Google Pixel 8 Pro ஆகியவை ஆப்சிடியன், ஹஸல், ரோஸ் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் Google Pixel 8 விலை ரூ.75,999 என்றும், Google Pixel 8 Pro மாடலின் விலை ரூ.1,06,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.