4ஜி ஸ்மார்ட்போன், 4ஜி சிம்: வோடபோன் புதிய சலுகை!!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (17:35 IST)
வோடபோன் நிறுவனம் தனது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான  புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.


 
 
ரூ.148-க்கு ரீசார்ஜ் செய்து, வாடிக்கையாளர்கள் 28 நாள்களுக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை இலவசமாகப் பெறலாம். 
 
4ஜி ஸ்மார்ட்போன்களில் 4ஜி சிம் கார்டு பயன்படுத்துவோருக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்பட உள்ளது.
 
மேலும், 4ஜி ஸ்மார்ட்போன்களில் 3ஜி சிம் கார்டு பயன்படுத்தினால் 300 எம்பி டேட்டா வழங்கப்பட உள்ளது. 2ஜி அல்லது 3ஜி ஸ்மார்ட்போன்களில் 50 எம்பி டேட்டா மட்டுமே கிடைக்கும். 
 
இந்த சலுகையில், வோடபோன் எண்ணில் இருந்து பிற நெட்வொர்க்குக்கு அழைப்பு விடுத்தால் நொடிக்கு 1 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்