விற்பனை செய்தது குற்றமா? மாட்டிவிட்ட வோடபோன்!!

வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (15:30 IST)
ஹட்ச் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை ரூ.32,320 கோடியை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கும் வோடபோன் நிறுவனத்திற்கும் ஏதேனும் பங்கு உள்ளதா என விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 


 

 
ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹட்ச் நிறுவனம் வோடபோனுக்கு விற்பனை செய்யப்பட்ட போது வரி செலுத்தாத காரணத்தினால் ரூ.32,320 கோடி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.   
 
ஹட்ச் நிறுவனம், ரூ.7,990 கோடிக்கான வரி பாக்கி, அதற்கான வட்டி ரூ.16,430 கோடி மற்றும் அபராதம் ரூ. 7,900 கோடி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவித்துள்ளது.  
 
ஆனால், வரி விதிப்பதை எதிர்த்து ஹட்ச் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறது. இதுவரை வோடபோன் நிறுவனம் இந்த வரியை செலுத்த வேண்டும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இதனை ஹட்ச் நிறுவனம் செலுத்த வேண்டும் என கூறுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
 
மேலும், முன் தேதியிட்டு வரி விதிக்க கூடாது என 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, அதனை மீறி எவ்வாறு முன் தேதியிட்டு வரி விதிக்க முடியும் எனவும், ஒரு நிறுவனத்தை கையகப்படுத்தும் போது வரி வரம்புக்குள் வராது என்றும் இந்த நோட்டீஸ் விதிமுறைக்களுக்கு மாறானது என தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்