குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
ஏழைகளின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்பவன் எவனோ, அவனது தேவைகளை ஆண்டவன் நிறைவேற்றி வைக்கிறான்.