பொளந்து கட்டிய யுவராஜ் சிங். பெங்களூருக்கு 208 ரன்கள் இலக்கு

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (22:09 IST)
கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் 2017 இன்று முதல் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இன்றைய முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதி வரும் நிலையில் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.



 


2வது ஓவரிலேயே கேப்டன் வார்னர் அவுட் ஆகிவிட்டாலும் அதன் பின்னர் இறங்கிய யுவராஜ் அதிரடியாக பொளந்து கட்டியதால் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 207 ரன்கள் குவித்தது. யுவராஜ் சிங் 62 ரன்களும், ஹென்ரிகுவி'ஸ் 52 ரன்களும் அடித்தனர்.

208 என்ற இலக்கை நோக்கி தற்போது பெங்களூர் அணி விளையாடி வருகிறது. முன்னணி வீரர்களான விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ் ஆகியோர் இல்லாத நிலையில் இந்த மாபெரும் இலக்கை வாட்ஸன் தலைமையிலான பெங்களூர் எட்டுமா? என்பதை இன்னும் சிலமணி நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்
அடுத்த கட்டுரையில்