மௌனம் பேசியதே - கவனத்தைக் கவரும் குறும்படம்

அண்ணாகண்ணன்
வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (13:21 IST)
தொழில்நுட்பம் நம் வாழ்வில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதையும் உண்மையான காதலில் அது எந்த இடம் வகிக்கிறது என்பதையும் சித்திரிக்கும் விதமாக அமைந்துள்ளது, மௌனம் பேசியதே குறும்படம்.
 
இந்தக் குறும்படம், வாய் பேச முடியாத ஒருவர், செல்பேசிக் குறுஞ்செயலி (மொபைல் ஆப்) மூலம், தன் குறையே தெரியாதபடி செல்பேசியில் எழுத்துகளைத் தட்டி எப்படிப் பேசுகிறார் என்பதையும் அதன் மூலம் அவர் வளர்க்கும் காதலையும் சொல்கின்றது. இறுதியில் தனக்குப் பேச வராது என்பதை என்பதை அவர் சொல்லும்போது என்ன ஆகிறது என்பதையும் ஓர் அழகிய திருப்பத்துடன் சொல்கிறது. 
 
செந்தில் குமார் மனோகரன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இந்தக் குறும்படம், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, படத் தொகுப்பு ஆகியவற்றிலும் நேர்த்தியாக உள்ளது. கவனத்தைக் கவரும் இந்தக் குறும்படத்தை இங்கே பாருங்கள்.