பிரியங்கா காந்தி பதவியேற்றதும் மீண்டும் அமளி.. இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

Mahendran

வியாழன், 28 நவம்பர் 2024 (12:58 IST)
வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி, இன்று பாராளுமன்றத்தில் எம்பியாக பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர், மீண்டும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கிய நிலையில், "ஒரே நாடு ஒரே தேர்தல்" உள்பட பதினைந்து மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால், அதானி விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் கடந்த மூன்று நாட்களாக அவைகளை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதனால் இதுவரை எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், இன்று வயநாடு தொகுதி எம்பியாக பிரியங்கா காந்தி பதவி ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, மீண்டும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிரகாஷ் அறிவித்தார். இதனுடன், நான்காவது நாளாக இரு அவைகளும் முடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்