கருங்காலி மாலை, செங்காலி மாலை.. என்ன வித்தியாசம்? எது சிறந்தது...?

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (18:40 IST)
கடந்த சில நாட்களாக கருங்காலி மாலை மற்றும் செங்காலி மாலை குறித்த தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த மாலைகளை பிரபலங்கள் அணிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த மாலைகள் குறித்த சில தகவல்களை பார்ப்போம். கருங்காலி மாலைகள் அணிந்தால் கண் திருஷ்டி ஏற்படாது என்றும் அதிர்ஷ்டத்துடன் செல்வ வளம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த மாலைகளை  அணிவதால் உண்மையில் செல்வம் அதிகரிக்குமா? என்றால் அதில் உண்மை இல்லை என்றுதான் பெரியவர்கள் தெரிவித்து வருகின்றனர். கருங்காலி செங்காலி ஆகிய இரண்டும் ஒரே தன்மையுடைய மரம் தான் என்றும் இந்த மரத்தில் இருந்து செய்யப்படும் மாலைகளை அணிவதால் உடல் ரீதியாக சில பலன்கள் ஏற்படும் என்றும் நமது முன்னோர்கள் மருத்துவ பயன்களுக்காகவே இந்த மாலைகளை அணிந்தார்கள் என்றும் இதனால் செல்வம் வரும் அதிர்ஷ்டம் வரும் என்று கூறுவது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது என்றும் பெரியோர்கள் கூறி வருகின்றனர். 
 
எனவே அதிர்ஷ்டம் வரும் செல்வம் அதிகரிக்கும் என்ற காரணத்தினால் கருங்காலி செங்காலி மாலைகளை அணியாமல் நம் முன்னோர்கள் கூறிய மருத்துவ பலன்களுக்காக அணிந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்