ஸ்ரீ ராகவேந்திரரின் ஆன்மீக சிந்தனை!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (08:05 IST)
ஆதிகாலம் தொட்டு எத்தனையோ அருளாளர்கள் நம் பொருட்டு திரு அவதாரம் செய்திருக்கின்றனர்.

 
சிறுவயதிலிருந்து வேங்கட நாதருக்கு வலிமை வாய்ந்த அக்னி சூக்தம், வருண மந்திரம், சமஸ்கிருத வேத ஸ்லோகங்கள் மற்றும் நிறைய ஸ்தோத்திரம் கற்றுக்கொண்டவர் ஸ்ரீ ராகவேந்திரர். அவற்றினை எப்பொழுதும் உச்சரித்துக்கொண்டு இருப்பார். சிலர் இன்றும் ஜீவசமாதியில் அந்த ஸ்லோக அதிர்வலைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
 
ஸ்ரீ ராகவேந்திரரின் ஆன்மீக சிந்தனை துளிகள்:
என் நாமத்தை எவர் உச்சரிக்கின்றார்களோ அப்பொழுதே அவர்களின் பாவங்கள் கழுவப்படுகின்றன.
 
பூஜைகள் தினமும் நடத்துபவர்களுக்கு நிச்சயம் முக்தியும், மோட்சமும் அளிப்பேன். எந்த சூழ்நிலையிலும் என் பக்தர்களுக்கு அபயம் அளிக்க சுறுசுறுப்பாகவும், தயாராகவும் இருக்கிறேன்.
 
என்னுடைய 700 பிருந்தாவனங்கள் என் பக்தர்களுக்கு உலகம் முழுவதும் உருவாகும். என்னை நீ பார்க்கும்போது உன்னுள் நான் பார்க்கிறேன்.
 
உன்னுடைய சுமைகளை என்னிடம் இறக்கு. நான் அவைகளைத் தாங்கிக் கொள்கிறேன்.
 
என்னுடைய உதவியும், அறிவுரையும் தேவைப்பட்டால் உடனடியாக அது உனக்கு வழங்கப்படும்.
 
என்னை வணங்குபவர்கள் ஸ்ரீமன் லக்ஷ்மி நரசிம்மரால் ஆசிர்வதிக்கப்பட்டு நோயில்லா வாழ்வும், நிறைந்த செல்வமும் அமைதியையும் பெறுவர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்