ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – துலாம்!

Prasanth Karthick

வியாழன், 27 மார்ச் 2025 (17:01 IST)
ஏப்ரல் மாதாந்த ராசிபலன் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் 12 ராசிகளுக்கும்..!

கிரகநிலை:

பஞசம  ஸ்தானத்தில்  புதன் , சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன்(வ), சூரியன் - களத்திர  ஸ்தானத்தில்  சந்திரன் -  அஷ்டம  ஸ்தானத்தில்  குரு - பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  அயன சயன போக  ஸ்தானத்தில்  கேது என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:

07-04-2025 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-04-2025 அன்று புதன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-04-2025 அன்று சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று  கேது பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-04-2025 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் பணவரவு கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள்.

பெண்களுக்கு மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். அரசியல்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

சித்திரை - 3, 4:
இந்த மாதம் திறமைகள் வெளிப்படும். எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடுவீர்கள். நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். அதிக சுமைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதேநேரம் சின்னச் சின்ன பிரச்னைகளில் தலையிட்டு வெளியில் வர தள்ளாடுவீர்கள்.

ஸ்வாதி:
இந்த மாதம் ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால் பதிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களுடன் இருந்த பிரச்னைகள் தீர்வுக்கு வருவதால் அலுவலகச் சூழல்களில் இருந்த இறுக்கம் மறைந்து சகஜநிலை உருவாகும்.

விசாகம் - 1, 2, 3:
இந்த மாதம் அரசுத்துறையிலிருந்து சலுகைகளை பெற குறுக்கு வழிகளை தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் புகழைத் தக்க வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும்.

பரிகாரம்: கோபூஜை செய்து பசுவை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்:  23, 24

 

 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்