சித்ரா பௌர்ணமி நாளில் மேற்கொள்ள வேண்டிய விரதம் மற்றும் பூஜை முறை!

Prasanth Karthick
திங்கள், 22 ஏப்ரல் 2024 (10:31 IST)
சித்திரை மாத முழு நிலவு நாளான சித்திரா பௌர்ணமி பல்வேறு தெய்வங்களுக்கும் உகந்த நாளாகும். இந்நாளில் விரதமிருந்து சரியான முறையில் வழிபட்டால் சகல பிரச்சினைகளும் நீங்கி சௌபாக்கியமாக வாழலாம்.



சித்ரா பௌர்ணமி நாள் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தருக்கு உகந்த நாளாகும். சித்திர குப்தர் கேதுவின் அதி தேவதையாக விளங்குபவர். கேதுவால் விளையக்கூடிய தோஷங்களை நீக்கி அருள் பாலிக்க கூடியவர். கேது தோஷம் இருப்பவர்கள் இந்நாளில் சித்திர குப்தரை வேண்டி விரதம் இருப்பது கேது தோஷ விளைவுகளை நீக்கும்.

சித்திரா பௌர்ணமி நாளில் மாலை நேரத்தில் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். சித்திரா பௌர்ணமி அன்று அதிகாலையே எழுந்து குளித்து விளக்கேற்றி தெய்வங்களை வழிபட்டு விரதத்தை தொடங்க வேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் அல்லது உப்பு சேர்க்காத உணவை அருந்தி சித்திர குப்த நாமத்தை துதிக்கலாம்.

ALSO READ: சித்திரா பௌர்ணமி சித்திர குப்தன் வழிபாடு..! சித்திர குப்த மந்திரத்தை ஓலையில் எழுதி வைத்தால் கிடைக்கும் சிறப்புகள்!

மாலையில் சித்திர குப்தரை பூஜித்து தென்னை ஓலையில் ’சித்திரகுப்தன் படி அளக்க..’ என்று எழுதி பூஜையறையில் வைக்க வேண்டும். இந்த நாளில் படிக்கும் குழந்தைகளுக்கு பேனா, நோட்டு வாங்கி தானம் செய்வது சிறப்பு. இந்த சித்திரா பௌர்ணமி நாளில் அளிக்கும் தானங்கள் மலையளவாக திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம். விரதம் முடித்து சித்திரான்னம் செய்து பௌர்ணமி நிலவு ஒளியில் அமர்ந்து உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்