ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினத்தன்று விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருவார்கள் என்ற நிலையில், ஐப்பசி மாத பௌர்ணமிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சுந்தர மகாலிங்கம் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை, பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.
அந்த வகையில், ஐப்பசி மாத பௌர்ணமி வரும் 15ஆம் தேதி கொண்டாட இருக்கிறது. அதைப் போல, 13ஆம் தேதி பிரதோஷ நிகழ்ச்சி கொண்டாட இருப்பதை அடுத்து நவம்பர் 13 முதல் 16ஆம் தேதி வரை சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேறும் அனுமதி என்றும் 11ஆம் தேதி 10 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.