விளக்கேற்றும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்..!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (19:47 IST)
விளக்கேற்றுவது என்பது சாதாரண விஷயமாக பொதுவாக கருதப்பட்டாலும் விளக்கு ஏற்றுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. 
 
ஒரு விளக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட திரிகள் இருந்தால் அதில் அனைத்திலும் விளக்கேற்ற வேண்டும்.  
 
பூஜை தொடங்கும் முன்னர் வீட்டில் சுமங்கலி தான் விளக்கை முதலில் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.  
 
விளக்குக்கு பூஜை செய்யும் போது சிறிது மஞ்சள் தூளால் விநாயகரின் சிலை செய்து குங்குமம் இட்டு அதன் பிறகு விளக்கு ஏற்ற வேண்டும்.  
 
அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன் பின் ஐந்து நூல்கள் கொண்ட திரி போட்டு தான் விளக்கேற்ற வேண்டும். 
 
விநாயகருக்கு ஒன்று,  முருகருக்கு ஆறு, பெருமாளுக்கு ஆறு, நாக அம்மனுக்கு நான்கு, சிவனுக்கு மூன்று, அம்மனுக்கு இரண்டு ,மகாலட்சுமி 8 என தீபம் ஏற்ற வேண்டும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்