நவராத்திரி விரதம் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

புதன், 18 அக்டோபர் 2023 (18:46 IST)
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நவராத்திரி விசேஷமாக கொண்டாடப்படும் நிலையில் நவராத்திரி நாட்களில் விரதம் இருப்பதையும் பலர் கடைபிடித்து வருகின்றனர்.
 
 இந்த நிலையில் நவராத்திரி நாட்களில் விரதம் இருப்பவர்கள் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு எட்டு நாட்களும் பகல் உணவு சாப்பிடாமல் இரவு பூஜை முடிந்தவுடன் பால் பழம் மற்றும் சாப்பிட வேண்டும்.
 
ஒன்பதாவது நாளாகிய மகா நவமி தினத்தன்று முழுவதுமாக சாப்பிடாமல் இருந்து மறுநாள் விஜயதசமி அன்று காலை 9 மணிக்கு சாப்பிட வேண்டும்.  முதல் 8 நாள் பகல் ஒருவேளை மட்டும் உணவு அறிந்து ஒன்பதாவது நாள் பால்பழம் மட்டும் சிலர் சாப்பிட்டுக் கொள்ளலாம்.  
 
விஜயதசமி அன்று காலையில் சுவை உள்ள உணவுகளை தயார் செய்து சக்திக்கு படைக்க வேண்டும்.  இந்த விரதத்தை ஒன்பது நாட்கள் கடைபிடித்து வந்தால் குடும்பத்திற்கு நல்லது என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்