திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவில் உலகப் புகழ் பெற்றது. சிவன், மலையாக அருள் பாலிக்கிறார் என்ற நம்பிக்கையால், கோவிலின் பின்புறத்தில் அமைந்துள்ள மலை அண்ணாமலையார் மலை என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த மலையை சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திபூர்வமாக கிரிவலம் செல்கின்றனர். குறிப்பாக கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி நாளில், 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பக்தி செலுத்துவதுண்டு.
இந்நிலையில், மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்றைய பெளர்ணமி தினம் காலை 11.40 மணிக்கு தொடங்கி, நாளை 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 12.57 மணிக்கு நிறைவடைகிறது.
அதன்படி, இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்த நேரமாக இருப்பதாக கோவில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.