இந்த நிலையில், வந்தவாசியில் அடுத்தடுத்த இரண்டு சிறுமிகளை தெருநாய்கள் கடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், இரண்டு இடங்களில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் தெருநாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களின் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
வந்தவாசி பஜார் வீதியில், ஒரு சிறுமி சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, தெருநாய்கள் சுற்றிவந்து கடித்துள்ளன. அதேபோல், இன்னொரு சிறுமி நகராட்சி அலுவலகத்தில் ஆதார் திருத்தம் செய்ய தனது தாயுடன் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, திடீரென தெருநாய்கள் தாக்கியுள்ளன.