திருவண்ணாமலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம்.. உகந்த நேரம் எது?

Mahendran

சனி, 8 பிப்ரவரி 2025 (17:00 IST)
திருவண்ணாமலையில் பிரபலமான அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மலையே சிவனாக போற்றப்படும் காரணத்தால், கோவிலின் பின்புறத்தில் உள்ள அண்ணாமலையார் மலை பக்தர்களால் புனிதமாக கருதப்படுகிறது. இந்த மலையை சுற்றி அமைந்துள்ள 14 கிலோமீட்டர் தொலைவுடைய கிரிவலப்பாதையில், பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திபூர்வமாக கிரிவலம் செல்கின்றனர்.

கார்த்திகை தீபத்திருநாளில் மகா தீபம் ஏற்றப்படும் போது, மற்றும் சித்ரா பவுர்ணமி அன்று, 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இந்த புனித நடைபயணத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் மேற்கொள்ள ஏற்ற நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, பிப்ரவரி 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.59 மணிக்கு பவுர்ணமி தொடங்க, மறுநாள் 12-ந்தேதி (புதன்கிழமை) இரவு 8.16 மணிக்கு நிறைவடைகிறது. 11-ந்தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதே நாளில் தைப்பூசம் விழா வருவதால், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்