நுனி முடி பிளவு பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

Webdunia
நுனி முடி பிளவு பிரச்னை ஏராளமானோருக்கு ஏற்படுகிறது. இதனால் முடி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும் இதனை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் இது முடி முழுவதும் பரவி அதிக முடி உதிர்வை ஏற்படுத்தும்.

தலைக்கு ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது, அதிக கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்புவை கூந்தலில் போடுவது போன்றவற்றால் ஏற்படுகிறது. நுனி முடி பிளவு பிரச்னையை வீட்டிலேயே எளிதில் வராமல் தடுக்கவும், சரிசெய்யவும் சில இயற்கை முறை தீர்வுகள் உள்ளது.
 
ஆலிவ் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது, இது உங்கள் கூந்தலுக்கு ஈரப்பதத்தை தருகிறது, மேலும் முடியை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. அதேபோல தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது, இது உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. இதனால் புதிதாக ஆரோக்கியமான முடிகள் வளர்கிறது.
 
இதற்கு அரை கப் தயிர், 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த ஹேர் மாஸ்க்கை உங்கள் தலைமுடியில் தடவவும். இதை 20 முதல் 30 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு பின்னர் ஷாம்பு கொண்டு அலசவும்.
 
தேங்காய் எண்ணெய் உங்கள் தலைமுடிக்கு சிறந்த எண்ணெய் ஆகும். தினமும் தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால் உங்கள் கூந்தல் கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
 
ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் முடியில் உள்ள அழுக்கை வெளியேற்றி, முடியை வலுப்படுத்தும். 1 கப் ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொண்டு உங்கள் கூந்தலை அலசுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் உங்கள் முடி பிளவு பிரச்னை சரியாகும். இதனால் முடி உதிர்வு கட்டுப்பட்டு கூந்தல் அடர்த்தியாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்