உணவில் புரதத்தை சேர்ப்பது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்கும். எனவே புரத சத்து நிறைந்துள்ள முட்டை, கோழி, பால், சீஸ், கொட்டைகள், தயிர் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கற்றாழை சாறில் புரோட்டியோலிடிக் என்சைம்கள் இருப்பதாக அறியப்படுகிறது, இது இறந்த சரும செல்கள் மற்றும் மயிர்க்கால்களை சரிசெய்யக்கூடும், இதன் விளைவாக முடி வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும். எனவே கற்றாழை சாறு குடித்து வந்தால் முடி வளர்ச்சி அடையும்.
உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான புரோட்டீன், வைட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் ஆகியவை முட்டையில் உள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முட்டையில் பயோட்டின் என்கிற வைட்டமின் முடி உதிர்வைக் கட்டுபடுத்தும்.