கருமையை நீக்கி மென்மையான சருமத்தை பெற உதவும் அழகு குறிப்புகள் !!

Webdunia
அன்றாடம் பாசிப்பயறு மாவை முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். 

பாசிப்பயறு பொடியை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளுங்கள். இதனை முகம், கழுத்து  பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.  பின்னர் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் சுருக்கங்கள் மறைந்து இளமையாக காணப்படுவீர்கள். 
 
பாசிப்பயறு மாவை தினமும் உடல் முழுவதும் பூசிக் குளித்து வந்தால் சருமம் மென்மையாக இருப்பதோடு, உடல் சூடு குறையும். எண்ணெய் பசை சருமம்  உள்ளவர்களின் முகம் எப்போதும் பொலிவிழந்து புத்துணர்ச்சியின்றி இருக்கும். அத்தகையவர்கள் பாசிப்பயறு மாவை அன்றாடம் பயன்படுத்தினால் முகத்தில்  எண்ணெய் வழிவது கட்டுப்படுத்தப்பட்டு சருமம் பொலிவாகும்.
 
சூரிய ஒளியால் கருமையாகிப் போன சருமத்தை மாற்ற பாசிப்பயறு உதவுகிறது. 1/2 ஸ்பூன் பாசிப்பரு, கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து, இதனுடன் சிறிது நீர் கலந்து முகத்தில் முகத்தில் தடவுங்கள். இதனை வாரம் மூன்று முறை செய்து வந்தால் உங்கள் சருமத்தில் இருக்கும் கருமை நீங்கி  பளிச்சென்று மாற்றும். 
 
சருமம் டல்லாக இருக்கிறதே என்று எண்ணும்போது பாசிப்பயறு மாவு சிறந்த தீர்வாக இருக்கும். 1 ஸ்பூன் பாசிப்பருப்பு மாவை எடுத்து, அதனுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவுங்கள். இதனை தொடர்ந்து செய்து வர முகத்தில் இருக்கும் சோர்வு, கருமை எல்லாம் மறைந்து பளிசென்று மாறிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்