பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

Mahendran
வியாழன், 9 ஜனவரி 2025 (18:26 IST)
ஒரு சில பெண்களுக்கு முகத்தில் முடி வளரும் நிலையில் அது எதனால் என்பது குறித்த மருத்துவ காரணங்களை தற்போது பார்ப்போம். பொதுவாக ஆண்களுக்கு மட்டுமே முகத்தில் முடி வளரும் நிலையில், ஒரு சில பெண்களுக்கு அரிதாக முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

பெண்களின் முகத்தில் முடி வளர்வது உடல்நல அபாயத்தை குறைப்பதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஹிர்சுட்டிசம் என்ற பாதிப்புக்கு காரணமாகவே பெண்களுக்கு முகத்தில் முடி தோன்றும் என்றும், ஐந்து முதல் பத்து சதவீத பெண்களை இது பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் கருப்பை அல்லது அட்ரீனலை குறிக்கக்கூடிய ஹைபராண்ட்ரோஜெனிசமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பெண்களின் உடல் பாகங்களில் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் காரணமாகவும் இது ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஹார்மோன்கள் அதிகரிப்பு காரணமாகத்தான் ஆண்களைப் போன்றே பெண்களுக்கு முடி முகத்தில் வளர்கிறது. இதை பார்லரில் சென்று நீக்கலாம் அல்லது சில மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும், ஆனால் மாத்திரை எடுத்துக் கொள்வது நிரந்தர தீர்வாக அமையாது என்றும் கூறப்படுகிறது.

முறையாக தோல்நல மருத்துவரை அணுகி அதற்காக உரிய சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்