இரவு நேரத்தில் ஜாக்கிங் செல்லலாமா?

Mahendran
சனி, 10 ஆகஸ்ட் 2024 (18:55 IST)
பொதுவாக பகல் நேரத்தில் தான் அனைவரும் ஜாக்கிங் செய்து வரும் நிலையில் ஒரு சிலர் வேலை பணி காரணமாக இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்து வருகின்றனர். அவ்வாறு இரவு நேரத்தில் ஜாகிங் செல்லலாமா என்பதை பார்ப்போம். 
 
இரவு நேரத்தில் சாப்பிட்டவுடன் ஜாக்கிங் செய்வதில் எந்தவித தவறும் இல்லை என்றும் அது மட்டும் இன்றி உணவு சீக்கிரமாக செரிமானம் ஆகவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.
 
இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்தால் கலோரிகள் எளிதாக எரிக்கப்படும் என்றும் வெறும் வயிற்றில் ஜாக்கிங் செய்வது போல் இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்வது சவாலாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.
 
இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்தால் தசைகள் பலம் சேர்க்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் அதிக அளவு இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்யக்கூடாது என்றும் கூறப்படுகிறது 
இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்தால் இரவில் நன்றாக தூக்கம் வரும் என்றும் தசைகள் தளர்வடையும் என்றும் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்தால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்காது  என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்