இன்று இரவும் கனமழை.. 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..

Siva

திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (16:09 IST)
சென்னை உள்பட சில மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்த நிலையில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய எட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சற்று முன் தெரிவித்துள்ளது.
 
மேலும் நாளை ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மாலை மற்றும் இரவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்