ஏசியில் அதிக நேரம் இருந்தால் முடி கொட்டுமா?

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (19:35 IST)
இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் முடி கொட்டுதல். இந்த முடி கொட்டுதலை தவிர்ப்பதற்காக ஏராளமாக செலவு செய்து மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் முடி கொட்டுதல் நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நமது உணவு பழக்க வழக்கம் மற்றும் நடைமுறை பழக்கவழக்கங்கள் தான் முடி கொட்டுவது காரணம் என்று கூறப்படுவது. குறிப்பாக ஏசியில் அதிக நேரம் இருந்தால் கூந்தல் நுனியில் வெடிப்பு பொடுகு தொல்லை ஏற்படும் என்றும் முடி கொட்டுதலுக்கு ஏசியில் பலமணி நேரம் இருப்பதும் ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது
 
முடி உதிர்தல் சரும நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் மன அழுத்தமும் ஒரு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். உடல் பராமரிப்பு மீதான அக்கரை மற்றும் விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வரும் நிலையில் அதிக நேரத்தில் ஏசியில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அதனால் கூந்தல் மட்டுமின்றி உடல் ஆரோக்கியம் சீர்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
நம் முன்னோர்கள் இயற்கையாக வாழ்ந்து கொண்டிருந்த போது எந்த விதமான உடல் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்தார்கள் ஆனால் நாம் செயற்கை முறையில் பல்வேறு வசதிகளை செய்து கொண்ட பின்னர்தான் முடிகொட்டுதல் உள்பட பல பிரச்சனைகள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்