கையால் உணவை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (21:39 IST)
அந்த காலத்தில் நமது தாத்தா பாட்டி அம்மா அப்பா எல்லோரும் கையால்தான் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் தற்போதைய தலைமுறையினர் மட்டுமே ஸ்பூன் எடுத்து உணவு சாப்பிடும் பழக்கத்தை கையாண்டு உள்ளனர்
 
 ஆனால் கையால் உணவு சாப்பிடுவதால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கிறது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். முதலாவதாக உணவு தொட்டவுடன் அது சூடாக இருக்கிறதா குளிராக இருக்கிறதா என்பதை உணர்ந்து கொள்வதால் உடனடியாக நாம் சாப்பிடப் போகிறோம் என்ற தகவலை மூளை வயிற்றுக்குள் அனுப்பி செரிமானத்திற்கு தேவையான நிகழ்வை தொடங்க உத்தரவு பிறப்பிக்கிறது. எனவே நாம் சாப்பிடும் உணவு ஜீரணிக்கும் தயாராகி வருகிறது 
 
அது மட்டுமின்றி நம் கையில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வாய் தொண்டை வழியாக குடலுக்கு சென்று செரிமானத்தை எளிதாக்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கையால் சாப்பிடும் போது கை விரல்கள் சில அசைவுகளை செய்யும் என்றும் அது சில தியான முத்திரைகளை குறிக்கிறது என்றும் அதனால் உடலுக்கு மிகப்பெரிய நன்மை என்றும்  முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே ஸ்பூனால் உணவை சாப்பிடுவதை விட கையால் உணவு சாப்பிடுவதே நல்லது என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்