சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

Mahendran

வெள்ளி, 8 நவம்பர் 2024 (18:45 IST)
சர்க்கரை வியாதியால் ஆண்களுக்கு பாலியல் பிரச்சனை ஏற்படும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், பெண்களுக்கும் பாலியல் பிரச்சனை ஏற்படுமா என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
 
தற்போதைய காலகட்டத்தில் சிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை வியாதி ஏற்படும் நிலையில், பெண்களுக்கும் சர்க்கரை வியாதி அதிகமாக ஏற்பட்டு வருகிறது. உடற்பயிற்சி இல்லாதது, ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது, மன அழுத்தம், தூக்கம் இல்லாமல் இருப்பது ஆகியவை காரணமாக சர்க்கரை வியாதி அதிகரித்து வருகிறது.
 
சர்க்கரை வியாதி காரணமாக பெண்களுக்கு பாலியல் உறவில் பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக பாலியல் உறவில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம் என்றும், விருப்பம் குறைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
பாலியல் உணர்வுகள் நார்மலாக இருந்தாலும் பாலியல் உறவுக்கான ஆர்வம் குறைந்து விடும் என்றும் பாலியல் உறவில் உச்சக்கட்டங்களுக்கான பிரச்சனைகளை சீரான முறையில் உணர முடியாததாக இருக்கலாம் என்றும் குறிப்பாக பாலியல் உறவின் போது வலி ஏற்படலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு உடலில் சில தொற்றுக் கிருமிகள் ஏற்படுகின்றன என்றும், இதன் காரணமாக ஹார்மோன் மாற்றங்கள், செல் மாற்றங்கள் காரணமாக பாலியல் உறவில் ஈடுபாடு இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
உடலில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது பெண்களுக்கு பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் என்றும், அதன் காரணமாக பெண்ணுறுப்பில் உலர்வு தன்மை ஏற்படும் என்றும், இதனால் பாலியல் உறவின்போது வலி ஏற்படுவதால் ஆர்வம் குறைந்து வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்