உலர் கண் நோயால் ஏற்படும் பிரச்சனைகள்.. தீர்வு என்ன?

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (18:30 IST)
கண்களில் ஏற்படும் பலவிதமான நோய்களில் ஒன்று உலர் கண் நோய். இந்த நோய் ஏற்பட்டால் கண்ணீரின் அளவு குறைய தொடங்கி கண்களில் எரிச்சல் ஏற்படும்.

கண்கள் எரிச்சல், வறட்சி, அரிப்பு, வலி, கண்களில் நீர் வடிதல் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள். எந்த ஒரு பொருளையும் நீண்ட நேரமாக உற்றுப் பார்ப்பது, தூய்மையற்ற சூழலில் இருப்பது, மாசுக்கள் இருக்கும் பகுதிகள் நீண்ட நேரம் கண்களை திறந்து வைத்திருப்பது ஆகியவை காரணமாக உலர் கண் நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

இந்த நோயிலிருந்து விடுபட வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். கண்களுக்கான சில பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும்.

 ஈரப்பதமான காற்று உள்ள இடங்களில் சில நேரங்களில் இருக்க வேண்டும். 3 மணி நேரத்துக்கு ஒரு முறை குளிர்ந்த நீரால் கண்களை கழுவ வேண்டும். சீரான இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.  


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்