குழந்தைகளுக்கு ஏற்படும் பல் சொத்தை.. தடுப்பது எப்படி?

சனி, 7 அக்டோபர் 2023 (17:44 IST)
குழந்தைகள் அதிகமாக இனிப்பு பலகாரங்கள் சாக்லேட் சாப்பிடுவதால் அடிக்கடி பல் சொத்தை பிரச்சனை ஏற்படும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கவும்.  

குழந்தைகள் சாக்லேட் போன்ற இனிப்பு பொருட்களை சாப்பிட்ட உடன் உடனடியாக வாய் கொப்பளிக்க வைக்க செய்ய வேண்டும்.  வாயில் சுகாதாரத்தை பேணாமல் இருந்தால் பல் சொத்தை பிரச்சனை அடிக்கடி ஏற்படும்.

மேலும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தினமும் ஆயில் புல்லிங் செய்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பற்கள் மற்றும் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் குறையும்.

 தினமும் ஆயில் புல்லிங் செய்து வருவதால் பல் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாது.  மேலும் கால்சியம் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும். கால்சியம் குறைவு காரணமாகவும் பல் சொத்தை ஏற்படுவதுண்டு.  

மேலும் கிராம்பு என்பது பல் வலியை தடுக்கும் ஒரு மருந்தாக கருதப்படுகிறது. எனவே உணவில் அவ்வப்போது கிராம்புகளை சேர்க்க வேண்டும்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்