காஜல் அகர்வால் தமிழில் வெளிவந்த கோமாளி என்ற காமெடி படத்தில் நடித்திருந்தார். இந்த ஒரே படத்தில் மட்டும் நடித்திருந்த இவர் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு மத்தியில் பெரிதாக எதுவும் பேசும்படியாக இல்லை எனவே இவர் டாப் நடிகைகள் லிஸ்டில் பின்தங்கி பத்தாவது இடத்தில் இருக்கிறார்.
டாப்ஸி:
இந்த ஆண்டு தமன்னா நடிப்பில் வெளியான கேம் ஓவர் தமிழ் , இந்தி , தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது . இந்த படத்தில் சிங்கிள் ஹீரோயினாக படம் மொத்தமும் இவரை நோக்கியே சென்றது. ஒரே படத்தில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி கண்ட தமன்னா இந்த ஆண்டின் டாப் நடிகைகள் லிஸ்டில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.
பிரியா பவானி ஷங்கர்:
கசடதபற , மான்ஸ்டர் என இரண்டு படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்களுக்கு பரீட்சயமான முகமாக பார்க்கப்பட்டார் எனவே இவர் இந்த ஆண்டி டாப் நடிகைகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.
மேகா ஆகாஷ்:
பேட்ட , வந்தா ராஜாவாதான் வருவேன் , என்னை நோக்கி பாயும் தோட்ட , பூமராங் உள்ளிட்ட ஐந்து படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்து அசத்தியது. இந்த ஆண்டின் அறிமுக நாயகியாக பார்க்கப்பட்டாலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஒரே ஆண்டில் உருவாகிவிட்டனர். எனவே இவர் டாப் நடிகைகள் லிஸ்டில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார்.
அமலா பால்:
அமலா பால் இந்த ஆண்டில் ஆடை, அதோ அந்த பறவை போல என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இதில் ஆடை பெரும் சர்ச்சைக்குள்ளான ஒரு படம். இந்த படத்தால் அமலா பால் அதிகம் பேசப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டார் எனவே 2019ம் ஆண்டின் டாப் 10 நடிகைகளில் 6 இடத்தை பிடித்துள்ளார் .
தமன்னா:
நடிகை தமன்னா தேவி 2, கண்ணே கலைமானே , ஆக்ஷன் , பெட்ரோமாக்ஸ் உள்ளிட்ட நான்கு தமிழ் படங்களில் நடித்து இந்த ஆண்டின் டாப் நடிகைகளில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
சமந்தா:
நடிகை சமந்தா இந்த வருடம் தமிழில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இதனால் பல சர்ச்சைகளில் நாம் சிக்குவோம் என தெரிந்தும் கூட போல்டாக நடித்து ஹிட் கொடுத்தார். என வே ஒரு படம் மட்டும் நடித்தாலும் இந்த ஆண்டின் டாப் நடிகைகளில் நான்காவது இடத்தை சமந்தா தக்கவைத்துள்ளார். இவர் 7 வது இடத்தில இருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஷி கண்ணா:
நடிகை ராஷி கண்ணா தமிழ் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலே உச்ச நடிகைகளுக்கு இணையாக பேசப்படுமளவிற்கு கிடு கிடுவென உயர்ந்துவிட்டார். மேலும் சங்கத்தமிழன் , அயோக்கியா என இரண்டு படங்களில் நடித்து இந்த ஆண்டின் டாப் நடிகைகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
ஜோதிகா:
சினிமாவிற்கு சில காலம் பிரேக் விட்டு மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளாக தேர்தெடுத்து நடித்து வெற்றிகண்டுள்ளார். அந்த லிஸ்டில் இந்த வருடம் மட்டும் ஜாக்பாட் , ராட்சசி , தம்பி உள்ளிட்ட மூன்று வெற்றி படங்களில் நடித்து 2019 ம் ஆண்டின் டாப் நடிகைகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.
நயன்தாரா:
ஐரா ,மிஸ்டர் லோக்கல் , கொலையுதிர்காலம் , விஸ்வாசம் , பிகில் உள்ளிட்ட 5 படங்களில் நடித்து இந்த ஆண்டின் முன்னணி நடிகை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். சென்ற ஆண்டு இந்த இடத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.