நடிகர் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடித்திருந்த இப்படத்தில் ஆபாசம், இரட்டை அர்த்த வசனம் உள்ளிட்டவை முழு முழுக்க நிறைந்திருந்ததால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் அதே படத்தின் இரண்டாம் பாகத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி வருகிறார்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படத்தில் ஷாலு ஷம்மு ஒரு முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார். கடந்த சில நாட்களாக இஷ்டத்துக்கு கவர்ச்சியை காட்டி கட்டுக்கடங்காமல் இருந்து வரும் ஷாலு இந்த படத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்டி நடித்துள்ளாராம். இந்த தகவலை அறிந்த நெட்டிசன்ஸ் இவங்க யாஷிகாவையே மிஞ்சிடுவாங்க போலயே என கூறி கிண்டலடித்து வருகின்றனர். இப்படம் வருகிற 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை குறிவைத்து தயாராகி வருகிறது.