கோடிகளில் சறுக்கும் வோடபோன் ஐடியா: இதுக்கு ஏர்டெல்லே தேவலாம் போல...

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (17:50 IST)
வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது என டிராய் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்  நவம்பர் இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளது பின்வருமாறு... 
 
இந்தியாவில் 2019 நவம்பர் இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 117.58 கோடியாக உள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இது 2.40% குறைவாகும். 
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஜியோ நிறுவனம் 56 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கி உள்ளது. 
 
அடுத்து பொதுத்துறையை சேர்ந்த பிஎஸ்என்எல் 3.41 லட்சம் இணைப்புகளை அளித்து இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் 16.5 லட்சம் இணைப்புகளை வழங்கி இருக்கின்றது. அதே சமயம் வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்