இஸ்ரோவின் 100வது செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-15 என்ற ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 29ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் காலை 6:23 மணிக்கு ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டால், விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க படியை உயர்த்தும் என்றும், இது ஒரு பெரிய சாதனையாக கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுண்டவுன், நாளை காலை 5:23 மணிக்கு தொடங்குகிறது என்றும், தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கை கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.