திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடும் அமைச்சர் அமித்ஷா... கூடுதல் பாதுகாப்பு..!

Siva

திங்கள், 27 ஜனவரி 2025 (07:46 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராட இருப்பதை அடுத்து, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் புனித பகுதியில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

இந்த ஆண்டு மகா கும்பமேளா என்பதால், 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 11 கோடிக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகருக்கு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர இருப்பதாகவும், அவர் திரிவேணி சங்கத்தில் புனித நீராட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து, அவர் பூரி சங்கராச்சாரியார் மற்றும் துவாரகா சங்கராச்சாரியார் ஆகியோர்களை சந்தித்து ஆசி பெறுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர் திரிவேணி சங்கத்தில் புனித நீராட உள்ளதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச மாநில அரசு செய்துள்ளது.

 Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்