கடைய சாத்திட்டு நடைய கட்டனும் போல... தலையில துண்டு போட்ட வோடபோன், ஏர்டெல்?

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (14:22 IST)
மத்திய அரசு வோடபோன், ஏர்டெல் கட்ட வேண்டிய கட்டணத்தில் விலக்கு அளித்தால் அந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட முடியும் என செய்திகள் தெரிவிக்கின்றன.  
 
ஜியோவின் வருகைக்கு பிறகு முதன்மையான நிறுவனங்களான ஏர்செல், ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் பலத்த வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதில் ஏர்செல் நிறுவனம் திவாலானது. அதைத் தொடர்ந்து இந்திய தொலைத்தொடர்பு கூட்டமைப்பில் உள்ள ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் பிற நிறுவனங்கள் தங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தன.
 
செல்போன் நிறுவனங்கள் லைசென்சு கட்டணம், ஸ்பெக்ட்ரம் கட்டணம் என 2 வகையான கட்டணங்களை மத்திய அரசுக்கு  செலுத்த வேண்டும். ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு கூட்டமைப்பில் இல்லாததால் விதிமுறைகள் ஏதுமின்றி சலுகைகள் அளித்து வருகின்றனர். 
ஆனால், இதனை செலுத்த வோடபோன், ஏர்டெல் தவறியதால் அனைத்தும் சேர்த்து தற்போது ரூ.92, 641 கோடி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்நிறுவனங்களுக்கு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. 
 
கடந்த மூன்றே மாதங்களில் ரூ.50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வோடபோன் நிறுவனமும்,ரூ. 23,000 கோடி இழப்பை சந்தித்திருப்பதாக ஏர்டெல் நிறுவனமும் அறிவித்துள்ளன. 
 
இந்நிலையில் இந்நிறுவனங்கள் மீது அரசு கருணை காட்டும் பட்சத்தில் அவை செயல்பட கூடும் என தெரிகிறது. இல்லையெனில் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்