மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி7 சீரிஸ் கொண்ட நான்கு ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் என நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் பிரேசிலில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
1. மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் வழங்கப்படலாம்.
2. மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் உள்ளிட்டவற்றில் வழக்கமான நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.