சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் வரும் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.