இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் 2018 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது காலாண்டு விற்பனை விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் சீன நிறுவனமான சியோமி அதிக பங்குகளை கொண்டுள்ளது.
ஆம், சியோமி நிறுவனம் மட்டும் சுமார் 29.8 சதவிகித இந்திய பங்குகளை பெற்றிருக்கிறது. அதாவது இந்த காலாண்டில் மட்டும் சுமார் 1.21 கோடி ஸ்மார்ட்போன் யூனிட்களை விற்பனை செய்து முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டு முடிவில் சாம்சங் நிறுவனம் முதல் இடத்தை பிடித்திருந்த நிலையில், இம்முறை சியோமி முதலித்தை பிடித்திருக்கிறது. ஆனால், பொதுவான விற்பனையை பொருத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை குறைவே என குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கல் மீது பணத்தை கொட்டிகொடுத்து சியோமி மற்றும் விவோ நிறுவனங்கள் கோடிகளில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக மொபைல் டேட்டா கட்டணம் பார்க்கப்படுகிறது.
ஏனெனில், மொபைல் டேட்டா கட்டணம் குறைந்து வரும் நிலையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு எளிமையாகி இருக்கிறது என கணக்கிடப்பட்டுள்ளது.