இரண்டு நாட்களுக்கு பெட்ரோல் இலவசம்! எங்கு, எப்படி தெரியுமா?

Webdunia
சனி, 21 ஜனவரி 2017 (10:18 IST)
மொபிகிவிக் பணப் பரிமாற்றம் கொண்ட பெட்ரோல் பங்குகளில், 20 மற்றும் 23 ஆம் தேதி பெட்ரோலுக்காகக் கொடுக்கப்படும் பணத்தை 100 சதவீதம் கேஷ்பேக் அளிப்பதாக மொபிகிவிக் தெரிவித்துள்ளது.


 
 
இந்தச் சலுகையை பெற, பெட்ரோல் பங்க்-இல் இருக்கும் QR குறியீட்டைப் பயன்படுத்திப் பணத்தைச் செலுத்த வேண்டும்.
 
மேலும் அதிகப்படியான கேஷ்பேக் 100 ரூபாய் மட்டுமே. இந்தச் சலுகை டெல்லி என்சிஆர், மும்பை மற்றும் பெங்களுரில் மட்டுமே. அதுவும் மொபிகிவிக் பணப் பரிமாற்றம் கொண்ட பெட்ரோல் பங்க்குகளில் மட்டுமே.
 
இந்தச் சலுகை ஜனவரி 20 மற்றும் 23 ஆம் தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே. மேலும் இதனை ஒருவர் ஒருமுறை தான் பயன்படுத்த முடியும். 
அடுத்த கட்டுரையில்