ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம்!!

Webdunia
புதன், 22 நவம்பர் 2017 (17:05 IST)
பேடிஎம் மூலம் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு மொபைல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு திட்டம் வழங்கப்படவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

 
சமீபத்தில் வெளியாகும் சில ஸ்மார்ட்போன்கள் பேட்டரி கோளாறு, தொழில்நுட்ப கோளாறு ஆகிய காரணத்தில் வெடிக்கிறது. அதிலும், ரெட்மி, சாம்சங் என்று துவங்கி ஐபோன் வரை இதே நிலைதான். 
 
ஆனால், பேடிஎம்-ன் இந்த விபத்து காப்பீடு திட்டம் ஸ்மார்ட்போன் வெடிப்புகளுக்கு அல்ல. இதுகுறித்து பேடிஎம் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
பேடிஎம் மூலம் வாங்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு ஓராண்டுக்குள் எதிர்பாராதவிதமாக சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும்.
 
மேலும் ஸ்மார்ட்போன் திருட்டு, டிஸ்ப்ளே சேதம் உள்ளிட்டவற்றிற்கு வாடிக்கையாளர்கள் இழப்பீடு வழங்கப்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆப்பிள், சியோமி, மோட்டோரோலா, விவோ உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த விபத்து காப்பீடு வசதி வழங்கப்படுகிறது. 
 
காப்பீடு திட்டத்தின் படி ஸ்மார்ட்போனின் மதிப்பில் இருந்து 5 சதவீதத்தை பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். குறிப்பாக பேடிஎம் மால் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த காப்பீடு அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்