குறிப்பிட்ட கார் உற்பத்தியை நிறுத்தும் மாருதி சுசூகி!!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (16:53 IST)
மாருதி சுசூகி கார் நிறுவனம் ரிட்ஸ் வகை கார்களின் உற்பத்தியை நிறுத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 
 
இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, கடந்த 2009-ம் ஆண்டு இந்திய கார் சந்தையில் ரிட்ஸ் என்ற கார் வகையை அறிமுகம் செய்தது. 
 
ரிட்ஸ் வகையான கார்கள் இதுவரை 4 லட்சம் யூனிட் வரை விற்பனையாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரிட்ஸ் வகை கார்களின் விற்பனை சரிந்து வருகின்றது. 
 
இதனால் இந்த வகை கார்களின் உற்பத்தியை மாருதி சுசூகி நிறுவனம் நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ரிட்ஸ் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் காரின் உறுதிபாகங்கள் மற்றும் சர்வீஸ் 10 ஆண்டுகள் வரை கிடைக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
 
 
அடுத்த கட்டுரையில்