தொடர்ந்து கலக்கும் ஷகீப் உல் ஹசன் – உலகக்கோப்பையில் புதிய சாதனை !

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (09:21 IST)
உலகக்கோப்பையில் நேற்று நடந்த பங்களாதேஷ் மற்றும் ஆப்கன் அணிகளுக்கு எதிரானப் போட்டியில் ஷகீப் உல் ஹசன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இந்த உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷை சேர்ந்த ஆல் ரவுண்டர் ஷகீப் உல் ஹசன் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கி வருகிறார். இதுவரை இந்த உலகக்கோப்பையில் மட்டும் 6 போட்டிகளில் விளையாடி 476 ரன்களை சேர்த்துள்ளார். அவரது சராசரி 95 ஆகும். இதில் 2 சதங்களும், 2 அரைசதங்களும் அடங்கும்.

நேற்றையப் போட்டியில் அவர் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் 35 ரன்கள் எடுத்தபோது உலகக்கோப்பை தொடர்களில் 1000 ரன்களை சேர்த்த முதல் வங்கதேச வீரர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக உலகக்கோப்பையில் 1000 ரன்களைக் கடந்த வீரர்களில் அவர் 19 ஆவது வீரராவார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்