உலகக்கோப்பை போட்டி தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் தங்கள் அரையிறுதி வாய்ப்பை முற்று முழுதாக இழந்துவிட்டன. இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் எதாவது அற்புதம் நடந்து உள்ளே சென்றால்தான் உண்டு.
இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி சவுத்டாம்டானில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கன் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமானது என்பதால் மும்முரமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானும் அணியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகளைக் கட்டுக்குள் கொண்டுவர இந்த ஒருப் போட்டியையாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது,