இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: வழுவான நிலையில் வெஸ்ட்இண்டீஸ்

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (11:33 IST)
வெஸ்ட்இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் தொடங்கியது.

 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி அபாரமாக பேட்டிங் செய்து 8 விக்கெட்டுக்களை இழந்து 414 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டவுரிச் 125 ரன்கள் குவித்தார். இலங்கை அணி தரப்பில் குமாரா 4 வீக்கெட்டுகளை  கைப்பற்றினார்.
 
இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 185 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகப்பட்சமாக கேப்டன் தினேஷ் சண்டிமால் 44 ரன்கள் எடுத்தார். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் மிகுவல் கம்மின்ஸ் 3 வீக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
இதனையடுத்து, 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 3வது நாள் முடிவில் 4 வீக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்து 360 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதிகப்பட்சமாக கியரன் பவல் 64 ரன்கள் எடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்