ஸ்ரேயாஸ் ஐயர் செய்யும் இரண்டு தவறுகள்… முன்னாள் இந்திய வீரர் அட்வைஸ்!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (13:17 IST)
கடந்த பிப்ரவரியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அகமதாபாத்தில் நடந்த போது, இந்திய அணியின் நடுவரிசை வீரர் ஸ்ரேயாஸ் காயமடைந்து போட்டியில் இருந்து விலகினார். அதையடுத்து  அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

காயம் காரணமாக அவர் ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களை இழந்தார். அவர் ஆசியக் கோப்பை தொடருக்கு மீண்டுவரக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி அவர் அந்த தொடருக்கும் திரும்ப வரமாட்டார் என தெரிகிறது.

இந்நிலையில் அவரின் பேட்டிங் பற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா “ஸ்ரேயாஸ் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அவர் சுழல்பந்து வீச்சாளர்களை எளிதாக எதிர்கொள்கிறார். ஆனால் ஸ்விங் பந்துவீச்சையும் ஷாட் பந்துகளையும் எதிர்கொள்வதில் அவருக்கு சிக்கல் இருக்கிறது.  அந்த விஷயங்களை அவர் சரி செய்துகொள்ள வேண்டும். அதை செய்தால் அவர் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக வருவார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்