டி 20 உலகக் கோப்பையில் கோலி எந்த இடத்தில் களமிறங்குவார்… முன்னாள் வீரர் சொன்ன ஷாக்கிங் கருத்து!

vinoth
சனி, 30 மார்ச் 2024 (07:31 IST)
ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் அங்குள்ள ஆடுகளங்கள் கோலியின் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அவரை அணியில் எடுக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார் என்று தற்போது சொல்லப்படுகிறது. அவர் அணியில் இடம்பெற்றாலும் அவருக்கான இடம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தற்போது ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால் என பல இளம் வீரர்கள் டி 20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில் “டி 20 உலகக் கோப்பையில் விராட் கோலி கண்டிப்பாக தொடக்க ஆட்டக்காரராகதான் களமிறங்குவார் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தற்போது ஐபிஎல்  போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் பெங்களூர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோலி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்